Entdecke diesen und 500.000 weitere Titel mit der Flatrate von Skoobe. Ab 12,99 € im Monat.
Beschreibung zu „என்ன என்ன ஆசைகளோ..?“
தமக்கை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு கொட்டாவி விடுவாள், “இன்றைக்கு, தேவிமா வீட்டில், எல்லோருமாய் நடனம் ஆடிக் கொண்டே இருந்தோமா, ஒரே களைப்பு, நான் அங்கேயே சாப்பிட்டு விட்டேன், தூங்கப்போகிறேன்” என்று எழுந்து போய் விடுவாள். ‘நான் இங்கே சாப்பாடு ஆக்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறேனே’ என்றால் ‘அப்படி என்ன வைத்திருக்கப்போகிறீர்கள்? பருப்புக் கறியும், பாகற்காய் பொரியலும்தானே? நாக்கு செத்து விடும். அங்கே, மீகோரேங், சில்லி சிக்கன், ஐஸ் கச்சான்... அதை விட்டு விட்டு, இந்த வறட்டுச் சோறைச் சாப்பிடுவதா? சேச்சே. நான் ஒன்றும், அவ்வளவு முட்டாள் இல்லை, என்று சொல்லிவிட்டுப் போவாள். நாவில் நீர் ஊறச் செய்யும் பண்டங்கள்தான். ஆனால், அடுத்தவர் வீட்டில் போய்ச் சும்மா தின்று கொண்டே இருப்பதா? நம் மரியாதை என்ன ஆவது? அத்தோடு, அவளுடைய அக்கா உண்பது, அதுதானே? அந்த வீட்டு வருமானத்துக்கு, அதற்கு மேல் அவர்களுக்குக் கட்டுமா? இதை புவனேசுவரி காற்றிடம்தான் கேட்க வேண்டும். அதற்குள் லோகேசுவரி தூங்கி விட்டிருப்பாள். எனவே, அவள் படுக்குமுன் உடம்பைக் கழுவச் சொல்லி விரட்டி, சுத்தமான நைட்டியை எடுத்து, அணிய வைத்துப் பிறகு, உறங்கச் சொல்லுவாள். அதற்கே, படாத பாடுபட வேண்டும். சரி, காலையில் பொழுது விடிந்த பிறகு, தங்கைக்கு ஏதாவது புத்தி சொல்லலாம் என்றால், அதற்கும் இயலாமல், பெரியவள் காலையிலேயே, வேலைக்குக் கிளம்பி ஓட வேண்டும். அதற்குள், இயன்றவரை, ரொட்டி சென்னா, கொஞ்சமாக ஒரு சம்பல் என்று ஏதோ ஒரு சமையல், தங்கைக்கு ஆக்கி வைத்துவிட்டு, முந்தைய நாள் மீதியைத் தனக்கு எடுத்துக் கொண்டு ஓடுவாள். மதியத்துக்குப் பரவாயில்லை. பள்ளியிலே, விலைக் குறைப்பு செய்யப்பட்ட உணவு, லோகேசுவரிக்குக் கிடைக்கும். அவளுக்குப் பிடிக்காத ‘வறட்டு சாம்பாரும் சோறும்’ எடுத்துப் போகத் தேவையில்லை. விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டியது இல்லை. தோழிகளின் வீடே கதி என்று கிடப்பாள். தோழிகள் வீடே கதியாக, அவள் கிடந்தவரை, புவனேசுவரி, இவ்வளவு கவலைப்பட்டதில்லை. கௌரவம் பாராமல், அங்கே சாப்பாட்டுக்கு நிற்கிறாளே என்ற கூச்சம் மட்டும்தான்
Verlag:
Veröffentlicht:
Druckseiten:
Sprache:
Medientyp:
Barrierefreiheitsinformationen
keine Information zur Barrierefreiheit bekannt
Barrierefreiheit
Barrierefreiheitsinformationen
keine Information zur Barrierefreiheit bekannt